இன்று தோன்றும் சந்திர கிரகணத்தை பார்க்க உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும் நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் ஏப்ரல் 15ம் திகதி நிகழ்ந்தது. இதையடுத்து இன்று 2வது சந்திர கிரகணம் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், இன்று வரக்கூடிய முழுசந்திரகிரகணம் காலை 5.15 மணிக்கு தொடங்கி 8.34 மணிக்கு (GMT நேரப்படி) நிறைவடையும் என்றும் கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பாக தெரியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சந்திரகிரகணம் அமெரிக்காவின் சிகாகோ (Chicago), கலிபோர்னியா (California) மிட்சிகன் (Michigan) ஆகிய மாகாணங்களிலும், அவுஸ்திரேலியா தலைநகர் சிட்னி (Sydney), ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நன்றாக தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதை பார்க்க தென் அமெரிக்காவை சேர்ந்த மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment