செய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பெண்

பெண்ணொருவர் செய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் சூசன்மேரி மெலான் (59) என்ற பெண்ணே இவ்வாறு சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

ரிச்சர்ட்பாலி என்பவரை அடித்துக் கொலை செய்ததாக குறித்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதன்படி கடந்த 1997–ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் இவர் அந்த கொலையை செய்யவில்லை. பொய்சாட்சி கூறியதாலும், குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதாலும் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

அதை ஏற்று கடந்த 17 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சி கடந்த 2006–ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவர் நடந்த சம்பவங்களை தனது தங்கையிடம் தெரிவித்து இருந்தார்.

இக்கொலையை சூசன் செய்யவில்லை என்றும், தான் பொய்சாட்சி கூறியதாகவும், அவர் நிரபராதி என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது.

குறித்த பெண்மணி செய்யாத குற்றத்துக்காக 17 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்படுகிறார்.




Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment