90 களில் தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடிய நடிகை குஷ்பூ இன்றும் அவருக்கான ரசிகர்கள் அவரை கொண்டாட்டிக்கொண்டுதான் வருகிறார்கள். சமூக வலைததளங்களில் ரசிகர்களுக்கென்றே நேரம் ஒதுக்கும் நடிகைகளில் குஷ்பூவிற்கு தான் முதலிடம் என்று கூறப்படுகிறது.
தமிழ் திரை உலகில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகாவை பலரும் நடிகை குஷ்பூவுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். நடிகை ஹன்சிகா தற்போது நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி. இயக்கும் ‘அரண்மனை’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.
குஷ்பு சிறந்த நடிகை என்று கூறும் நடிகை ஹன்சிகா ஒரு முறை குஷ்பு தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நல்ல படங்களை தேர்வு செய்து சிறப்பாக நடிப்பதாக பாராட்டியுள்ளார் தன்னைவிட நன்றாக நடிக்கிறாய் என்றும் கூறினார்.
மேலும் எப்போதுமே குஷ்புதான் சிறந்த நடிகை. குஷ்பு கணவர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதன் மூலம் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டு உள்ளது. ‘அரண்மனை’ படத்தில் என் நடிப்பைப் பார்த்து குஷ்பு புகழ்ந்து ஊக்கப்படுத்துவம் விதமாக நிறைய ஆலோசனைகளும் சொல்லி இருக்கிறார் என்று ஹன்சிகா கூறி மகிழ்கிறார்.

0 comments:
Post a Comment