இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருக்கும் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய்யின் ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிடிருக்கிறார்கள். அதனால் படத்தின் இறுதி வேலைகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் ‘செல்பிபுள்ள…’ என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார்.
நடிகர் இளைய தளபதி விஜய்யின் நடிப்பிற்கு ரசிகர் கூட்டம் ஏராளம் அவரது ரசிகர்களையும் தாண்டி அவரது குரலில் வெளிவரும் பாடல்கள் அனைத்து திரை ரசிகர்களையும் சென்றடையும் அந்த வகையில் ‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள பாடலைக் கேட்க ரசிகர் கூட்டம் செப்டம்பர் இரண்டாம் வாரத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

0 comments:
Post a Comment