நடிகை வினோதினிக்கு திருமணம்

இயக்குநர் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடிகை அனன்யாவின் அக்காவாக நடித்து தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் நடிகை வினோதினி ரசிகர்களுக்கு பரிட்ச்சையமானவர். 

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பேசப்பட்ட அவரது நடிப்பு ‘யமுனா’, ‘கடல்’, ‘தலைமுறைகள்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகை வாய்ப்பை பெற்று தந்தது.

படங்களில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை வினோதினிக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. 

அடுத்தமாதம் ஒக்டோபர் முதல்வாரத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் மிக எளிமையாக இவர்களது திருமணம் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரது திருமணச் செய்தி அறிந்த பல திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment