விண்ணிலிருந்து வரும் கற்களால் மனித இனம் அழிந்து போகும் ஆபத்துள்ளதாக இங்கிலாந்தின் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில், 2014 ஈ.சி என பெயரிடப்பட்டுள்ள விண்கல்லொன்று 38,300 மைல்கள் தொலைவில் நெருங்கி வந்துள்ள நிலையில் பூமியை கடந்து வேறு திசைக்குச் சென்றுள்ளது.
1400 விண்கற்கள் பூமிக்கு அச்சறுத்தலாய் இருப்பதாகவும் இவை அதிக தீங்கு விளைவிக்கும் கற்கள் என நாசா கண்டறிந்துள்ளதாகவும் பேராசிரியர் பிரையன் காக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் விண்கல் பூமியைத் தாக்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அபாயத்திலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய முடியும் என்பது குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் இதுவே தற்போது அனைவருக்கும் மிகப்பெரிய கவலையாகவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment