சூரியனின் மேற்பரப்பில் நடைபெறும் வெடிப்புக்கள் மற்றும் சீறல்களை நாசாவின் சோலார் டைனாமிக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. பூமியில் அதிகமானவர்கள் ஆகஸ்ட் மாதத்தின் இறுதிவாரத்தை கோடைகால விடுமுறையாக கழித்துக் கொண்டிருந்தவேளையில் சூரியனின் மேற்பரப்பில் இந்த மாற்றங்களை காணமுடிந்துள்ளது.
ஆகஸ்ட் 24ம்திகதி ஞாயிற்றுக்கிழமை சூரியனின் மேற்பரப்பில் இடைநிலையான வெடிப்புக்கள் மற்றும் சீறல்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. இது சூரியனின் இடதுபக்க மேற்பரப்பில் ஏற்பட்டுள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் வருகின்ற இந்த சீறல்கள் கடும் கதிர் இயக்கத்தை ஏற்படுத்துகின்றவை. பூமியின் ஊடாக இந்த கதிர் இயக்கம் செல்லுமானால் மனிதர்களுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும். எவ்வாறாயினும் இந்த இது கடுமையானதாக இல்லை. அவ்வாறு ஏற்படின் பூமியில் ஜீ.பி.எஸ் மற்றும் தொலைத்தொடர்பாடல் சிக்னல்கள் பயணிக்கும் வழியை இந்த கதிர்இயக்கம் பாதிக்கும்.

0 comments:
Post a Comment