ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியான பிரசார காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் நாட்டில் உள்ள சன்னி பிரிவினர் அங்குள்ள ஷியா பிரிவின மக்களைத் தாக்கிவருவதுடன், பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இணையதள பிரசாரம் மூலம் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட இந்தியாவில் இருந்து 80 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான இணையதள பிரசார காணொளி, ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த காணொளி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவரை மையமாக வைத்து இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளியை தடை செய்யவேண்டும் என்று வலைத்தள அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும், தமிழ் மொழிபெயர்ப்பு எங்கு? யாரால் செய்யப்பட்டது? என்பது குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ISIS அமைப்பினர் தமிழிலும் பிரசாரம்! ISIS Tamil Video
ReplyDelete