ஐஸ்லாந்து பனிப்பாறைக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள்!




ஐஸ்லாந்து மத்தியப் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா 500 மீ அடர்த்திகொண்ட வட்னஜோகுல் பனிப்பாறையின் கீழ் அமைந்துள்ளது.

கடந்த வாரம் இந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான நிலை அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால் எரிமலை வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில் அங்கு நான்காவது உயர் எச்சரிக்கை நிலைக்கான ஆரஞ்சுக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள மற்றொரு எரிமலை வெடித்துச் சிதறியபோது வீசி எறியப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு ஐரோப்பிய வான் போக்குவரத்து பாதிக்கப்படடது.

எனவே இந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் வான் போக்குவரத்து குறித்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட்னஜோகுல் பனிப்பாறைப் பகுதியின் மீது பறந்து நிலைமையை ஆராய்ந்தபோது அங்கு ஏற்பட்டிருந்த பல பள்ளங்களைக் கண்டனர். அவை ஒவ்வொன்றும் 10 முதல் 15 மீற்றர் வரையான ஆழமும், 

ஒரு கிலோமீற்றர் அகலமும் கொண்டவையாக இருந்தன.

இத்தகைய பள்ளங்கள் பணி வெடிப்பின் சாத்தியத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்தப் பனிப்பாறை வெடிக்கும் போது அதன் வடக்குப்பகுதியில் பெரு வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment