தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘அஞ்சான்’ படத்திற்காக கடந்த இரண்டு வாரங்களாக தேங்கி இருந்த படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் ஆறு நேரடி தமிழ்ப் படங்களும் மூன்று மொழிமாற்றப் படங்களும் அடக்கம்.
நடிகர் அதர்வா ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்த ‘இரும்பு குதிரை’, ‘நான்’ படத்திற்கு பின்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் ‘சலீம்’, ‘மங்காத்தா’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்’ படங்களில் நடித்த அஸ்வின் நடித்த துப்பறியும் கைரேகை நிபுணன் பற்றிய கதையான ‘மேகா’ , ‘காதல் 2014′, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என ஆறு தமிழ்ப் படங்கள் திரைக்கு வருகின்றன.
இது தவிர ஜேம்ஸ் பொண்ட் ஹீரோ பியர்ஸ் புரோசோன் நடித்த ‘தி நொவம்பர் மான் ‘. ஹொலிவூட் அனிமேஷன் படமான ‘நிஞ்சா டேர்ட்டிஸ்’, தெலுங்கு படமான ‘ரபாசா’ ஆகியவையும் நாளை திரைக்கு வருகின்றன. இதில் ரசிகர்களுக்கு எந்த படத்தை தேர்வு செய்வது என்று குழம்பும் அளவிற்கு படங்கள் திரைக்கு வந்தாலும் சொல்லும் படியான முன்னணி நாயகர்களின் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment