அடிக்கடி பயன்படுத்தாத விருந்தினர் அறையொன்றை பல மாதங்கள் கழித்து திறந்த வீட்டுரிமையாளர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
சுமார் 5000 குளவிகள் அந்த விருந்தினர் அறையை ஆக்கிரமித்து, அறையிலிருந்த கட்டில், மெத்தை, தலையணையின் பெரும்பகுதியைக் குடைந்து மாபெரும் கூடொன்றைக் கட்டியிருந்தன.
பிரித்தானியாவின் வின்செஸ்டர், ஹாம்ப்ஷயரில் உள்ள 5 அறைகளைக்கொண்ட வீடொன்றிலேயே குளவிகள் இந்த கூட்டை அமைத்து வாழ்ந்துவந்துள்ளன.
பின்னர், பூச்சி கட்டுப்பாட்டு நிபுணர் வரவழைக்கப்பட்டு இந்த மாபெரும் குளவிக்கூடு அப்புறப்படுத்தப்பட்டது.
தனது 45 வருடகால பணியில் இவ்வாறானதொரு சவாலை முன்னர் சந்தித்ததில்லை என்று ஜோன் பேர்கெட் எனும் பூச்சிக் கட்டுப்பாட்டு நிபுணர் தெரிவித்தார். ஒரு படுக்கையறையில் இதற்கு முன்னர் தான் கண்ட குளவிக்கூடுகளில் பெரியது, ஒரு டென்னிஸ் பந்தின் அளவே இருந்தாகவும் கூறினார்.
தான் அந்தக் குளவிகளை அப்புறப்படுத்த முயற்சிக்கும்போது சுமார் 2000 குளவிகள் தன்னை வட்டமிட்டவண்ணம் இருந்ததை நினைவுகூர்ந்த அவர், எவரேனும் அறியாமல் அவ்வறைக்குள் நுழைந்திருப்பார்களேயாயின், என்ன நேர்ந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை என்றார்.
இரசாயன பூச்சிக்கொல்லி தெளித்து இந்த மாபெரும் குளவிக்கூடு அழிக்கப்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் அவ்வறை மாபெரும் இனவழிப்பின் அடையாளத்தை காட்டிநின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment