கடனட்டைகள் மற்றும் வங்கி இலத்திரனியல் அட்டைகளை எடுத்துச்செல்வதாயின் பணப்பை அவசியம். இந்த தேவையையும் ஐபோன்களே நிறைவேற்றக்கூடிய வகையிலான புதிய கையடக்கத் தொலைபேசிகளை தயாரிக்கும் முயற்சிகளை அப்பிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
ஸ்மார்ட் போன்களில் கடனட்டைகளின் தகவல்களை உள்ளடக்கி வைக்கக்கூடிய புதிய அப்ஸை கொண்டதாக கையடக்கத் தொலைபேசியொன்றை தயாரிப்பதற்கும் விரல் அடையாளத்தைப் பதிவுசெய்வதன் மூலம் கடன் அட்டை உரிமையாளர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இது அமையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபோன் 6இல் இந்த புதிய விடயத்தையும் உள்ளடக்குவதற்கு அப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடனட்டைகள் தொடர்பான விபரங்கள் மற்றையவர்களுக்குச் செல்லாதவாறு பாதுகாப்பு நிறைந்ததாக இந்த அப்ஸை தயாரிக்கவும் அப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கடனட்டைகளுடன் ஐபோன்கள்!
ReplyDelete