தமிழுக்கு வருகிறார் மற்றொரு மும்பை நடிகை திருப்தா பராசர். கோலிவுட் படங்களில் மும்பை நடிகைகளும், மல்லுவுட் நடிகைகளுமே போட்டி களத்தில் இருக்கின்றனர்.
‘கன்னியும் காளையும் செம காதல்‘ என்ற படம் மூலம் மற்றொரு மும்பை நடிகை திருப்தா பராசர் கோலிவுட்டுக்கு வருகிறார். இதுபற்றி இயக்குனர் வி.சி.வடிவுடையான் கூறியது:வில்லனாக அறிமுகமாகி இடையில் ஹீரோவாக நடித்து வரும் கரண் இப்படத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடிக்கிறார்.
அவர் நடிக்கும் 75வது படமான இதில் அவருடன் விவேக், கஞ்சா கருப்பு, தருண்கோபி, கனல் கண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். காஷ்மீர், குற்றாலம், மைசூர், ஊட்டி, மதுரை, தேனி போன்ற பகுதியில் ஷூட்டிங் நடந்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி 5 கேமராக்கள் வைத்து 10 நாட்கள் படமாக்கப்பட்டது.

0 comments:
Post a Comment