‘சித்திரம் பேசுதடி, ‘தீபாவளி‘ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாவனா. இவர் தமிழ் படங்களில் நடித்து 4 வருடம் ஆகிவிட்டது. கன்னடம், மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவரைப்பற்றி அடிக்கடி திருமண செய்தி அடிபடுகிறது.
அவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்வேன் என்று கடந்த பல வருடமாக காலம் கடத்தி வருகிறார். இந்நிலையில் தனக்கு வந்த சில படங்களை ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வந்தார். வீட்டிலும் திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்த இயக்குனர் ஒருவர் பாவனாவை நேரில் அழைத்து, ‘திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா?Õ என்று விளக்கம் கேட்டார். இதுபற்றி பாவனா கூறியது:
என்னுடைய சகோதரருக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்க உள்ளது. ஆனால் எனக்கு திருமணம் ஆக உள்ளதாக சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் திருமணம் இந்த ஆண்டு நடக்காது. கன்னடத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன்.
எனக்கு திருமணம் என்று தகவல் பரவியதையடுத்து அப்பட இயக்குனர் என்னை அழைத்து, ‘உங்களுக்கு திருமணம் நடக்கப்போவது உண்மைதானா? ஏன் என்னிடம் முதலிலே சொல்லவில்லைÕ என்று கோபமாக கேட்டார். அவரிடம் என் சகோதரருக்குத்தான் திருமணம் என்று கூறியபிறகே சமாதானம் ஆனார்.
இதற்கிடையில் சில படங்களை ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்தேன். அதற்கு காரணம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில நிகழ்ச்சிகள் இருப்பதுதான். மலையாளம், கன்னட படங்களில் நான் தற்போது பிஸியாக இருக்கிறேன் என்றார்.

0 comments:
Post a Comment