நடிகையை வேவுபார்த்த வீட்டு வேலைக்காரி

வீட்டு வேலைக்காரி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக பிரபல கன்னட நடிகை சுருதி கூறியுள்ளார்.

பிரபல கன்னட நடிகை சுருதியை பற்றி அவரது வீட்டு வேலைக்காரி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதை அவர் பொலிஸ் விசாரணை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சுருதி கூறியதாவது, எனது வீட்டில் வேலை செய்து வந்த ஷோபா என்பவர் எனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பொய் குற்றச்சாட்டுகளை கூறி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்படுவதாக ஏற்கனவே நான் சொன்னேன். அது தற்போது உண்மையாகியுள்ளது.

எனது ஒவ்வொரு நடவடிக்கை பற்றியும் எனது முன்னாள் கணவருக்கு வேலைக்காரி தகவல் கொடுத்துள்ளார்.

எனவே வேலைக்காரி ஷோபா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக இன்று வழக்கு தாக்கல் செய்கிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள அநியாயத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. நடிகையை வேவுபார்த்த வீட்டு வேலைக்காரி

    ReplyDelete