பண்டுவம்! கல்லூரியில் நடக்கும் திகில் கதை!

மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமை, காதல்  பிரச்னையால் தற்கொலை, அறுவை சிகிச்சை குளறுபடிகள் என  பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. அது  இன்றளவும் தொடர்கதையாகவே இருக்கிறது. 

இதுபோன்ற ஒரு  கதை அம்சத்துடன் உருவாகிறது பண்டுவம் என்ற படம். இது  பற்றி இயக்குனர் சிவகுமார் கூறியது: மருத்துவ கல்லூரி  ஒன்றில் படிக்கம் மாணவன் ஒருவனுக்கு ஏற்பட்ட கசப்பான  அனுபவம் அவனை முரடனாக்குகிறது. அதற்கு பழி வாங்க  துடிக்கிறான். 

யாரை, எதற்காக பழிவாங்க முயல்கிறான் என்பதுதான் ஸ்கிரிப்ட். சென்னை, கொடைக்கானல் போன்ற  இடங்களில் ஷூட்டிங் நடந்திருக்கிறது. ஜிஎஸ்.டவுலப்பர்  நிறுவனம் தயாரிப்பு.

ஹீரோ சிதேஷ், ஹீரோயின் சுவாசிகா. இவர் ‘சாட்டை‘  படத்தில் நடிததவர். மற்றும் எஸ்.சிவகுமார், சுயம் பிரகாஷ்  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவா ஒளிப்பதிவு. நிரோ இசை. 
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment