காதல் முறிவை நினைத்து நயன்தாரா கண்ணீர்

காதல் முறிவை நினைத்து நயன்தாரா கண்கலங்கியதாக இயக்குனர் கூறி உள்ளார்.ஆர்யா தயாரிக்கும் படம் ‘அமர காவியம். இப்படத்தை தனது நெருங்கிய தோழி நயன்தாராவுக்கு திரையிட்டு காட்டினார். காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. 

படத்தை பார்த்து முடித்த நயன்தாரா திடீர் என்றுகண் கலங்கி அழத் தொடங்கினார். இந்த கதை என் வாழ்க்கையில் நான் சந்தித்த சம்பவங்களை நினைவுபடுத்துவதாக கூறினார்.

இதுபற்றி பட இயக்குனர் ஜீவா சங்கர் கூறும்போது,‘இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. படம் பார்த்து முடித்த பிறகு நயன்தாரா நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்தார். எவ்வளவு சமாதானம் சொல்லியும் கண்கலங்குவதை நிறுத்தவில்லை. 

வீட்டுக்கு சென்றபிறகும் அவர் அழுதுகொண்டிருந்தாராம். படத்தை பார்த்து முடித்த ஒரு வாரத்துக்கு பிறகுதான் என்னை தொடர்பு கொண்டு படம் பற்றி தனது கருத்தை தெரிவித்தார் என்றார். நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா இருவரை காதலித்தார். அந்த காதல் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment