‘விஸ்வரூபம் 2 சர்ச்சையை சந்திக்குமா என்றதற்கு பதில் அளித்தார் கமல்.கமல் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்‘ திரைக்கு வந்தபோதே அதன் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக கமல் அறிவித்தார்.
அத்துடன் முதல் பாகம் ஷூட்டிங்கின்போதே 2ம் பாகத்துக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் அதற்குள் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் கமல். அதன் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து கமலிடம் கேட்டபோது,‘விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு முன்பாகவே உத்தம வில்லன் படம் திரைக்கு வரும். இது முழுக்க முழுக்க காமெடி படம் அல்ல என்றார். விஸ்வரூபம் முதல்பாகத்தை வெளியிட்டபோது சர்ச்சையில் சிக்கியது.
அதுபோல் 2ம் பாகமும் சர்ச்சையில் சிக்குமா என்றதற்கு, ‘சர்ச்சை எதுவும் இருக்காது என கமல் தெரிவித்தார். இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

0 comments:
Post a Comment