தமிழ் சினிமாவில் பெண் இசை அமைப்பாளர்கள் குறைவு.
ஏ.ஆர்.ரெஹைனாவை அடுத்து இப்போது ஸ்ரீவித்யா என்றா இன்னொரு பெண் இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார்.
என்ன பிடிச்சிருக்கா படத்துக்கு இசையமைக்கும் இவர் கூறியதாவது: பல மொழிகளில், பல இசையமைப்பாளர்களின் இசையில் 3 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த 88 படங்களின் பாடல்கள் குறித்து ஆராய்ச்சி செய்து முனை வர் பட்டம் வாங்கியுள்ளேன்.
இப்போது என்ன பிடிச்சிருக்கா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். இசைத் துறையில் எனக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி ரோல் மாடல்.
எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், வெற்றி நம்மை தேடி வராது. நாம்தான் வெற்றியை தேடி தேடி செல்ல வேண்டும்.

0 comments:
Post a Comment