அஞ்சான் படம் மிகப்பெரிய கமர்சியல் ஹிட் ஆகும் என்று வில்லன் நடிகர் வித்யுத் ஜாம்வால் கூறினார்.
தமிழில், பில்லா 2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் வித்யுத் ஜாம்வால். இப்போது அஞ்சான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது:
அஞ்சான் படம் கண்டிப்பாக மிகப்பெரிய கமர்சியல் ஹிட் ஆகும். இயக்குனர் லிங்குசாமி திறமையான கமர்சியல் இயக்குனர். எதை எப்படி சொன்னால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதை அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறார். அதன்படி இந்தப் படத்தை எடுத்துள்ளார். இதில் நான் வில்லனாக நடிக்கவில்லை.
முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளேன். என்னுடன் மனோஜ் பாஜ்பாய், ராஜ்பால் யாதவ், ஆசிப் பஸ்ரா ஆகியோரும் நடிக்கிறார்கள். கமர்சியலாக இந்தப் படம் மிரட்டும். இவ்வாறு வித்யுத் கூறினார்.


0 comments:
Post a Comment