மணப்பெண் மருதாணி வைக்காததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

ஹைதராபாத்தில் மணப்பெண் கையில் மருதாணி வைக்காததால், கோபமடிந்த மணமகன் திருமணம் வேண்டாமென்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

கன்சன்பாக் உமர் காலனி பகுதியை சேர்ந்த ஏற்கெனவே விவாகரத்து பெற்ற மீர் மசூத் அலி (32) என்பவருக்கும் முகமது கவுஸ் பாஷா என்பவரின் மகளுக்கும் கடந்த 9ம் திகதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன்பே மணமகனுக்கு வரதட்சணை அளிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த 7ம் திகதி மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகளை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, மணப்பெண் மருதாணி வைத்துக்கொள்ளாததை கவனித்த மணமகன் குடும்பத்தினர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர், மணமகனிடம் மன்னிப்பு கேட்டபோதும், அதை ஏற்றுக்கொள்ளாத மணமகன், திருமணத்தை நிறுத்தி விடும்படி கூறியுள்ளார்.

மணமகனின் பெற்றோரும் திருமணத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியதால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டதாகவும் திருமணத்தை நிறுத்த வேண்டாமென்றும் கெஞ்சியுள்ளனர்.

ஆனால் அதனை மணமகன் ஏற்காததால் திருமணம் நின்று போயுள்ளது.

பின்னர் மணப்பெண் வீட்டார் இது குறித்து பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment