உத்திரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் தனக்கு பரிசு பொருட்களை தர மறுத்ததால் அவரது போலி நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழில் அதிபர் தேவேஷ் சர்மா என்பவருக்கு பெண் ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சந்திக்காமலே நண்பர்களான இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து சர்மாவிடம் அப்பெண் தன்னை பார்டிக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள குட்டை பாவாடையும், ரூ.4,500 மதிப்புள்ள கைப்பையும் வாங்கித் தருமாறு அந்த பெண் சர்மாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவற்றை வாங்கிக் கொடுக்க சர்மா மறுத்துவிட்டார்.
இதனை தொடர்ந்து சர்மா பேசியபடி ஷோப்பிங் மாலிற்கு வராததால் அப்பெண் ஆத்திரமடைந்துள்ளார்.
தனக்கு 2 லட்சம் ரூபாய் தரவேண்டும் என மிரட்டிய அப்பெண்ணின் பேச்சை சர்மா பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் வெறுப்பில் அவர், சர்மாவின் போலி நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டது மட்டுமல்லாமல் ஆபாசபட தளங்களில் சர்மாவின் கைப்பேசி எண்ணை வெளியிட்டு அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என குறிப்பிட்டுள்ளார்.
இதை அறிந்ததும் சர்மா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார், அந்த பெண் மானக் நகரைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் கைப்பேசியின் மூலம் சர்மாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

0 comments:
Post a Comment