இஸ்ரேலுக்கு நிதியுதவி வழங்கும் மேக் டொனால்ட் உணவகத்தை புறக்கணிக்க கோரிக்கை!

காஸா மீது கோரத் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேலுக்கு நிதியுதவி செய்துவரும் மேக் டொனால்ட் உணவகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என மலேசிய முஸ்லிம்கள் கோரியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற துரித உணவகத் தொடரான மேக் டொனால்ட் நிறுவனம் இஸ்ரேலுக்கு நிதி உதவிகள் அளிக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ள ஒரு சில தரப்பினர் நேற்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் ''ஜாலான் துன் பேராக்'' என்ற இடத்திலுள்ள மேக் டொனால்ட் உணவகத்தின் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இருப்பினும் தகவல் ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில், தாங்கள் இஸ்ரேலுக்கு எந்தவித நிதி உதவியும் அளிப்பதில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தாங்கள் எந்த ஒரு அரசியல் சர்ச்சையிலும் தலையை நுழைப்பதில்லை என்றும், ஒரு நாட்டில் நடக்கும் அடக்குமுறையிலும், வன்முறைகளிலும் தாங்கள் எந்தவிதத்திலும் சம்பந்தப்படுவதில்லை என்றும் மேக் டொனால்ட் நிறுவனம் தற்காத்துக் கூறியுள்ளது.

மேக் டொனால்ட் நிறுவனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள். ‘யூதர்களின் பொருட்களை வாங்காதீர்கள்’ என்ற வாசகங்கள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரத்தில், இஸ்ரேலுக்கு நிதி உதவிகள் அளிப்பதாக குற்றம் சாட்டப்படும் மற்ற சில நிறுவனங்களின் வணிக முத்திரை சின்னங்களும் இடம் பெற்றிருந்தன.






Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment