சினிமா வாய்ப்பு கிடைக்காததால் மாடலிங்குக்கு மாறிய நடிகை!

தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மாடலிங் தொழிலுக்கு சென்றுவிட்டேன் என்றார் பார்வதி ஓமனகுட்டன். 

அஜீத் நடித்த ‘பில்லா 2 படத்தில் நடித்தவர் பார்வதி ஓமன குட்டன். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மாடலிங் தொழில் செய்ய சென்றார். 

இதுபற்றி அவர் கூறியதாவது:தமிழில் ‘பில்லா 2 படத்தில்தான் அறிமுகமானேன். ஆனால் அப்படம் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை. அந்தபடத்துக்கு பிறகு தமிழில் புதிய படம் எதிலும் நடிக்க எனக்கு வாய்ப்பு வரவில்லை. 

இது வருத்தமாக இருந்தது. இதையடுத்து எனது கவனத்தை இந்தி படங்களில் திருப்பினேன். ‘பீட்சாஇந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

இப்படத்துக்கு பிறகு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்க காத்திருக்கிறேன். விரைவில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆக உள்ளேன். நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்தபோது மாடலிங் தொழில்தான் என்னை பிஸியாக வைத்திருந்தது. ஷூட்டிங்கிற்கு இடையே பல்வேறு ஊர்களுக்கு மாடலிங் பணிக்காகத்தான் சென்றேன்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. சினிமா வாய்ப்பு கிடைக்காததால் மாடலிங்குக்கு மாறிய நடிகை!

    ReplyDelete