கோவையில் நடந்த விடியாத விடுதலை எனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை விசாகா சிங், திருநங்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களது சாதனைகள் முடங்கி போவதாகவும், தன்னைப்போன்று பிற நடிகைகளும் திருநங்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தனது சக நடிகைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழில் திரை உலகில் ‘பிடிச்சிருக்கு’ படத்தின் மூலம் அறிமுகமான விசாகா சிங், நடிகர் சந்தானம் கூட்டணியில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடிப்பில் சற்று தாராளமாக நடித்ததன் மூலம் தமிழில் பிற பட வாய்ப்புகளை பெற்றார்.
தற்பொழுது தமிழில் ‘வாலிப ராஜா’, ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படங்களில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து வருக்கிறார்.

0 comments:
Post a Comment