சர்ச்சை சாமியார் நித்யானந்தா, தான் கன்னட அமைப்புகளை திட்டவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
கன்னட அமைப்புகள் புதன்கிழமை பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு வெளியே போராட்டத்தில் குதித்ததோடு, நித்யானந்தாவை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பியுள்ளனர்.
சாமியார் நித்யானந்தாவை கைது செய்து ஆகஸ்ட் 6ம் திகதிக்குள் ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என கடந்த திங்கள்கிழமை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிப்படை பொலிஸார் தன்னை தேடிவரும் நிலையில் கன்னட அமைப்புகளின் போராட்டம் தொடர்பாக நித்யானந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் கன்னட அமைப்பினரை விமர்சிக்க வில்லை, சிறுவயதில் திருவண்ணாமலையில் இருக்கும் போது கொடியை தூக்கிக்கொண்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகளை தான் திட்டினேன்.
வாரத்தின் 7 நாட்களும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக கூச்சல் போடுவார்கள். ஒரு பிரச்சினை முடிவதற்குள் இன்னொரு பிரச்சினைக்கு தாவி விடுவார்கள்.
அவர்களுடைய குறிக்கோள் பணம் தான், பணம் பட்டுவாடா செய்யப்பட்டப் பின் காணாமல் போய்விடுவார்கள்.இதனை நான் திருவண்ணா மலையில் பார்த்துள்ளதால் கூறினேன்.
ஆனால் கன்னட தொலைக்காட்சிகள் தவறாக வெளியிட்டுள்ளனர் என்றும், கன்னட மக்களை என்னுடைய மக்களாக கருதுவதால் ஒருபோதும் அவர்களை பற்றி தவறாக பேசமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Aachi News, online tamil news, tamil cinema, tamil actors, tamil actresses, astrology, pictures, videos, photo gallery, world news, indian top news, chennai news, கேலரி, ஜோதிடம், தமிழ் வீடியோ, தமிழ சினிமா, கோலிவுட் , நடிகைகள், நடிகர், திரைப் படங்கள், சினிமா, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, கிசுகிசு, சினிமா விமர்சனம், சினி தகவல்கள், தமிழ் செய்தி, செய்தி, india news, tamil news, tamil web site, tamil news site, tamil news, tamil news website, tamil news, news, tamil website, current events, latest news, political news, cinema news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional news India, indian newspaper, indian daily news, indian news online, indian tamil news, puthinam
ReplyDelete