கணிதத்தின் நோபல் பரிசான சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்ற ஈரானிய பெண்

உலக கணித அமைப்பு நடத்திய சோதனையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ள ஈரானிய நாட்டை சேர்ந்த பெண்ணான மரியம்மிர்ஸாகனி சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் இந்த விருதை ஈரான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

உலகளவில் கணிதத்தில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கணித அமைப்பு நடத்தி வருகிறது.

இறுதிப் போட்டிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் சிறந்து விளங்குபவர்களுக்கே இந்த சர்வதேச விருது வழங்கப்படும். இதன்படி இந்த ஆண்டு அதற்கான போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் சர்வதேச அளவிலான முதல் பரிசை தட்டிச் சென்றார் ஈரான் நாட்டை சேர்ந்த மரியம் மிர்ஸாகனி என்ற பெண்.

கடந்த 1977ஆம் ஆண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிறந்த இவர்- தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.

சர்வதேச கணித அமைப்பு நடத்திய போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட தனது ஆய்வுக் கட்டுரையில் கணித நுட்பங்களை பல்வேறு வரம்புகளில் தொழில்நுட்பத்திறன்- தொலைநோக்குப் பார்வை ஆகிய சேர்க்கையை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இதனை ஆய்வு செய்த போட்டியின் நடுநிலையாளர்கள் முதல் பரிசுக்கான விருதை இவருக்கு வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே கணிதத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்திவரும் இவர்- கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்க கணித சங்கம் நடத்திய ஷாட்டர் பரிசுக்கான விருதையும்- கடந்த 2009ஆம் ஆண்டு புளுமெந்தால் விருதையும் பெற்றுள்ளார்.

தற்போது நடந்து முடிந்துள்ள போட்டியில் மரியம் மிர்ஸாகனியுடன் பிரான்சின் ஆர்தர் அவிலா நியூஜெர்சி பரின்ஸ்டன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மஞ்சுல் பார்கவா- பிரித்தானியாவின் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை போட்டியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள மரியம்- இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும்- ஏனைய பெண் அறிவியல் மற்றும் கணித விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும் எனவும் எதிர்வரும் காலங்களில் போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. கணிதத்தின் நோபல் பரிசான சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்ற ஈரானிய பெண்

    ReplyDelete