நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸின் திரைப்படத்தை எதிர்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சீமான் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ஈழப் பிரச்சினையின் போது தனி மனிதனாக ஒவ்வொரு மேடையிலும் பிரபாகரன் பெயரையும், ஈழத்தையும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பேசியவன் நான்.
நம் தமிழ் இனத்திற்கு எதிராக ஒரு திரைப்படத்தை எடுத்து அதை வெளியிட நான் எப்படி ஆதரவு கொடுப்பேன்?
இதற்குமுன் நம் இனத்திற்கு எதிராக வந்த ‘டேம் 999' படத்தையும், சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘இனம்' திரைப்படத்தையும் நான் எதிர்க்கவில்லையா?
‘புலிப்பார்வை' திரைப்படத்தை நண்பர் பிரவீன்காந்தி எடுத்து முடித்தவுடன் எனக்கு போட்டுக் காண்பித்தபோதே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சொல்லிவிட்டேன். அவரும் நீக்குவதாக எனக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ் இனத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட ‘தேன்கூடு' படம் எவ்வளவோ முயற்சி செய்தும் இன்னும் வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கிறது, அதைக் கேட்க இங்கு யாரும் இல்லை.
தமிழ் இனத்திற்கு எதிராக யார் படம் எடுத்தாலும் நான் எதிர்ப்பேன், ஆனால் ‘கத்தி' படம் என் இனத்திற்கு எதிரான படம் அல்ல, இயக்குனர் முருகதாசும், விஜய்யும் தமிழ்ப் பிள்ளைகள்.
மேலும், அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தை எதிர்ப்போம் என்றும், ஆனால் அதற்காக படத்தையும், விஜய்யையும் எதிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment