இந்தியா சென்று திரும்பிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் இவர் எபோலா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்ததாகவும், இவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துளு;ளனர்.
குறித்த பெண்ணின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவரது சவப்பெட்டி சீல் வைக்கப்பட்டு, எட்டு அடி ஆழ்குழியில் புதைக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment