ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அவற்றை இணைத்து தனி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளது.
அதன் தலைவனாக, அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்-பாக்தாதி, தன்னைத் தானே அறிவித்துள்ளான்.
இந்நிலையில், இந்த பயங்கரவாத அமைப்பில் பெல்ஜியத்தை சேர்ந்த, யூனுஸ் என்ற 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இளம் வயது போராளியாக, கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி உள்ள யூனுசின் புகைப்படத்தை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.


0 comments:
Post a Comment