செவ்வாய்க் கிரகத்கதில் ஒட்சிசன் வாயுவை உருவாக்கும் முயற்சியில் நாசா!

மனிதனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இதன் படிமுறை வளர்ச்சியில் மனித இனம் வேற்றுக்கிரகங்களில் வசிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. 

செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாக தங்கி வாழ்வதற்கு பல நாடுகளிலும் உள்ள வசதியுள்ள சிலர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் விஞ்ஞானிகள் அங்கு வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கவுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் புதிய ரோவர் விண்கலமானது அந்தக் கிரகத்தின் மேற்பரப்பில் ஒட்சிசனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்தள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை சாத்தியமாக்கும் வகையில் அங்கு 7 விஞ்ஞான செயற்றிட்டங்களை ரோவர் விண்கலம் முன்னெடுக்கவுள்ளதுடன் மேலும் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்கள் குறித்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளவுள்ளது.

செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் காபனீரொட்சைட் வாயுவை ஒட்சிசனாக மாற்றும் நடவடிக்கையில் ரோவர் விண்கலம் ஈடுபடவுள்ளதோடு எரிபொருளைப் பெறுவதற்கான வழிவகையை அது கண்டறியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. செவ்வாய்க் கிரகத்கதில் ஒட்சிசன் வாயுவை உருவாக்கும் முயற்சியில் நாசா!

    ReplyDelete