ஜேர்மனில் எபோலா வைரஸின் அறிகுறிகள் தென்பட்ட பெண் ஒருவர் நேற்று (20) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியத் தலைநகர் பேர்லினிலுள்ள அலுவலகமொன்றில் பணிபுரிந்துவந்த குறித்த பெண்- எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த அலுவலகத்திற்கு சுகாதார அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதனையடுத்து நோயாளர் காவு வண்டியில் குறித்த பெண் அழைத்துச் செல்லப்பட்டு செரிட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை பரிசோதித்துள்ள வைத்தியசாலை அதிகாரிகள்- இவர் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் அந்த வைரஸ் தாக்கத்தின் சில அறிகுறிகள் இவரிடம் தென்படுவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் இரத்த மாதிரி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அதன் முடிவுகள் வெளிவந்ததன் பின்னரே உறுதியான தீர்மானத்திற்கு வர முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து குறித்த அலுவலகத்திலுள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment