விழிப்புணர்வுப் பேரணியில் விஜய்சேதுபதி

ஓகஸ்ட் 3 ஆம் திகதி காலை 7 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில், ‘ஜீவன் பவுண்டேசன்’ என்கிற அமைப்பு தசை சிதைவு நோயினைப் பற்றிய ‘மயோரேலி’ என்ற ஒரு விழிப்புணர்வு பேரணியை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த பேரணியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். மக்களுக்கு இந்த நோய் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொள்கிறார். மேலும் நடிகைகள் வரலட்சுமி, காயத்ரி ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

பிறவியிலேயே குழந்தைகளை தாக்கும் நோய்களுள் ஒன்று தசை சிதைவு நோய். இந்த நோய் தாக்கிய குழந்தைகள் நடக்க சக்தியிழந்து அடிக்கடி கீழே விழுவார்கள். காலப்போக்கில் சிலர் மூன்று சக்கர வண்டியிலேயே பயணிக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகிறது. இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியில் கலந்து கொள்வது குறித்து விஜய்சேதுபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. விழிப்புணர்வுப் பேரணியில் விஜய்சேதுபதி

    ReplyDelete