உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை! தலையணைக்கு அடியில் வைத்திருந்த செல்போன் வெடித்தது!


அமெரிக்காவில் உள்ள 13 வயது சிறுமி பயன்படுத்தி வந்த Samsung Galaxy S4 திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் Dallas என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி சில மாதங்களாக Samsung Galaxy S4 என்ற ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார். 
இவரை செல்போனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும் பழக்கமுடையவர். சம்பவ தினத்தில் நள்ளிரவில் தனது படுக்கையறையில் ஏதோ தீ எரியும் வாசனையை உணர்ந்து எழுந்து பார்த்தபோது தான் தலைக்கு வைத்து படுத்திருந்த தலையணையில் நெருப்பு பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

பின்னர் அந்த சிறுமியின் சோதனை செய்தபோது, அவர் தலையணைக்கு அடியில் வைத்திருந்த ஸ்மார்ட் வெடித்து தீப்பிடித்துள்ளதைக் கண்டறிந்துள்ளார்.

தீப்பற்ற ஆரம்பித்த நிலையில் சிறுமி விழித்துக்கொண்டதால் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பியுள்ளார்.

இதுகுறித்து சாம்சங் டீலர்கள் நடத்திய விசாரணையில் குறித்த ஸ்மார்ட் போனில் ஒரிஜினல் பேட்டரி இல்லாமல் இருந்ததாகவும், விலைகுறைவான டூப்ளிகேட் பேட்டரி உபயோகித்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டது. 

எனவே எந்த வகை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அந்த மாடலுக்குரிய ஒரிஜினல் பேட்டரியை பொதுமக்கள் உபயோகிக்குமாறு சாம்சங் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment