மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர். ஷோமா தமிழ் மொழி இலக்கிய அறவாரியம் அறிவித்துள்ள சிறந்த தமிழ் நூலுக்கான விருதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ‘மூன்றாம் உலக போர்’ நூல் வென்றுள்ளது. இந்த சர்வதேச விருதானது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் கொண்டது.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வருகின்ற டான்ஸ்ரீ கே.ஆர். ஷோமா மொழி இலக்கிய அறவாரியம் சிறந்த தமிழ் நூலுக்கான உலகத் தமிழ்ப் போட்டியை அறிவித்திருந்தது. இதில் மலேசியா, இலங்கை, இந்தியா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாட்டில் இருந்து வெளிவந்த படைப்புகள் பரிசீலிக்கப்பட்டன.
உலகமயமாதல், புவி வெப்பமயமாதல், விவசாயிகளின் வாழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக பதிவி செய்யப்பட்டிருக்கும் ‘மூன்றாம் உலக போர்’ நூலுக்கு இறுதியில் சிறந்த படைப்புக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்கான அறிவிப்பை கோலாலம்பூரில் அறவாரியத்தின் செயலாளர் டத்தோ சகாதேவன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் வைரமுத்து தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொண்டார்.

0 comments:
Post a Comment