மத்தியப் பிரதேசத்தில் 60 வயது பெண்மணியின் கருப்பையில் 36 வருடமாக இருந்த குழந்தையின் எலும்புக்கூடு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
பிபாரியாவை சேர்ந்த காந்தாபாய் குன்வந்த் என்ற 60 வயது பெண்மணி கடந்த வாரம் அடிவயிற்றில் வலி ஏற்பட்டதால் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
அப்போது மருத்துவ பரிசோதனையில், அவரது அடிவயிற்றின் கீழ் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் அது புற்றுநோயாக இருக்கலாம் என கருதியதால் அவரை எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அப்போது அது பிறக்காத குழந்தையின் எலும்புக்கூடு என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அந்த எலும்புக்கூட்டை அகற்ற முடிவு செய்த மருத்துவர்கள் உலகில் எங்கும் இதுபோல் சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்று ஆராய்ந்துள்ளனர்.
அப்போது 1978ம் ஆண்டு பெல்ஜியத்தை சேர்ந்த பெண்ணொருவர் உடலிலிருந்து 18 வருடங்கள் கழித்து இதே மாதிரி எலும்புக்கூடு அகற்றப்பட்டதை அறிந்துள்ளனர்.
எனவே அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் செய்த சிகிச்சை முறையை பின்பற்றி தற்போது காந்தாபாய்க்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

0 comments:
Post a Comment