இன்றைய நாள் எப்படி? 01.08.2014


01ஓகஸ்ட் 2014
தின பலன்

 மேஷம்
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்


 ரிஷபம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு


 மிதுனம்
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை


 கடகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

 சிம்மம்
இன்றைய தினம் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமாக நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்


 கன்னி
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்


 துலாம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்


 விருச்சிகம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே


 தனுசு
விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன் -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை


 மகரம்
இன்றைய தினம் திருப்திகரமாக இருக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்


 கும்பம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை


 மீனம்
காலைப் பொழுதிலிருந்தே மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வாகனப் பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment