நீங்களும் விளையாடலாம்! அஞ்சான் படத்திற்காக பிரத்தியேக Game!


சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்திற்கும் புதிதாக ஒரு Game ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி நிறைந்த சினிமாத் துறையில் விளம்பரத்திற்காக நாளாந்தம் புதிய உத்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது படங்களை மையப்படுத்தி Gameகளை வடிவமைத்து சிறுவர்களைக் கவர்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

'Anjaan : Race Wars'  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விளையாட்டு, கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. 

கிரிஷ்-3, கோச்சடையான் போன்ற படங்களுக்கு கேம் வடிவமைத்த ஹங்கம்மா நிறுவனம், இந்த விளையாட்டையும் வடிவமைத்துள்ளது. இதனை அபிளிகேஷனாக இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

'Anjaan : Race Wars'  Game அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா, லிங்குசாமி, யுடிவி தனஞ்செயன், வசனகர்த்தா பிருந்தா சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அஞ்சான் Gameஐ அறிமுகம் செய்துவைத்து பேசிய நடிகர் சூர்யா, பொதுவாக வீட்டில் நான் எனது பசங்களோடு அதிகமாக கேம் விளையாடுவேன்.

இப்போது எனது படத்தின் பெயரிலேயே ஒரு விளையாட்டு உருவாகி இருப்பது சந்தோஷமாகவுள்ளது. அஞ்சான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப்படத்திற்காக நிறையவே உழைத்துள்ளோம். அஞ்சான் படத்தின் டீசர் போன்று அஞ்சான் கேமும் நல்ல வரவேற்பு பெறும்.

அஞ்சான் படத்தை ஓகஸ்ட் 15ஆம் திகதி உறுதியாக திரையிடவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

லிங்குசாமி பேசுகையில், சினிமாவே ஒரு விளையாட்டு மாதிரி தான். இங்கு யார் முந்தி செல்கிறார்களோ அவர்களே ஜெயிக்கிறார்கள். சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும்போது அதற்கு இதுபோன்ற விளம்பர யுக்திகள் தேவைப்படுகிறது.

சூர்யா சூப்பர் ஹீரோ என்பதால் அஞ்சான் படத்திற்கு அவர் மட்டுமல்லாது எல்லோரும் நிறைய உழைப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும், ஓடுகிற குதிரையில் சூர்யா, முதல் குதிரையாக வருவார் என்றார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment