சிம்பு தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போது தனக்கு “லிட்டில் சூப்பர் ஸ்டார்” பட்டத்தை தானே வைத்து கொண்டார்.
கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் “யங் சூப்பர் ஸ்டார்” என்று மாற்றி தனக்கு தானே பட்டத்தை வைத்துக் கொண்டார். அவர் நடிக்க படங்களில் அவரது பெயருக்கு முன் இந்த பட்டம் சேர்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சூப்பர்ஸ்டார் கருத்துகணிப்பில் தன் பெயர் ஊறுகாய் அளவிற்கு கூட பரிசீலிக்கப்படவில்லை என்ற விரக்தியில் சில நாட்களுக்கு முன்பு “யங் சூப்பர் ஸ்டார்” பட்டம் தேவையில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தற்போது இந்த பட்டத்தை பிரேம்ஜி ஏற்றுக் கொண்டுள்ளாராம். இது குறித்து பிரேம்ஜி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் தலைவர் சிம்பு, யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எனக்கு கொடுத்துள்ளார். ஆதலால் இந்நாள் முதல் நான் யங் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி என்று கூறியுள்ளார்.
இருக்கிற பிரச்சினையில இதுவேறயா என ஆராய்ந்தபோது, பிரேம்ஜி எப்போதும் கலகலப்பாகவும், கலாய்த்தும் பேசுபவர் என்பதால் இந்த ட்விட்டும் அப்படியாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது!
எப்படியோ சூப்பர்ஸ்டார் என்ற ஒருவார்த்தையை வைத்து சினிமாத்துறையும், அதுசார்ந்த ஊடக, இணைய வட்டாரங்களும் பரபரப்பையும் பீதியையும் மட்டும் கிளப்பிவருகின்றன.

0 comments:
Post a Comment