நான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சலீம்’. இந்த திரைப்படம் இன்று(ரம்ஜான்) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென படத்தில் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சலீம் படம் ரம்ஜான் திருநாளில் ரிலீஸாகும் என விஜய் ஆண்டனி இந்த படத்தின் பாடல் வெளியீட்டின்போது அறிவித்திருந்தார். ஆனால் கடந்த 18ம் தேதி வெளியான தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ‘சதுரங்க வேட்டை’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகி பத்து நாட்களையும் தாண்டி ஹவுஸ்புல் காட்சிகளாக பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் தியேட்டர் அதிபர்கள் ‘சலீம்’ படத்திற்கு தியேட்டர் ஒதுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் தனது படத்தை அடுத்த மாதம் 8ம் தேதி ரிலீஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யா நடித்த அஞ்சான் படம் பெருவாரியான தியேட்டர்களில் ரிலீஸாவதால் விஜய் ஆண்டனியின் சலீம் படம் சில நாட்கள் மட்டும் தான் ஓடும் என கிசுகிசுக்கப்படுகிறது. தனுஷ் மற்றும் சூர்யா படங்களினால் தனது படத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விஜய் ஆண்டனி செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறாராம்.

0 comments:
Post a Comment