இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் இருந்த ஒரே ஒரு மின் நிலையமும் சேதமடைந்ததால் தற்போது அந்நகரமே இருளில் மூழ்கும் ஆபாயத்தில் உள்ளது. தற்போது 90 வீதம் காஸா இருளில் மூழ்கியுள்ளதாக காஸாசெய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 7ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் உக்கிரத் தாக்குதல்களினால் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் காவுகொள்ளப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் உயிர்பலி அதிகரித்து வருவது சர்வதேச நாடுகளுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தொடர் தாக்குதால் காஸாவில் உள்ள அனைத்து மின் நிலையமும் தகர்க்கப்பட்டு, ஒரே ஒரு மின் நிலையம் மட்டும் இருந்துள்ளது.
ஆனால் அதுவும் தற்போது குண்டு வீச்சினால் சிதைக்கப்பட்டுள்ளதால் காஸாவே இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே காஸாவில் செய்யப்பட்டு வந்த மின் விநியோகமும், இப்போது இல்லாமல் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என அதிகாரியொருவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment