தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவேரிப்பட்டணம் அருகேயுள்ள ஜபேதார்மேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (24), தன் வீட்டு அருகே கோழி ஒன்றை பிடிக்க முயன்றபோது, புதரில் பதுங்கியிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு அவரது காலில் கடித்துள்ளது.
இதையடுத்து, பாம்புக் கடிக்கு சிகிச்சை பெற கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரைக் கடித்த மலைப்பாம்பையும் சாக்குப் பையில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இருந்தவர்கள் இதைக்கண்டு அலறியுள்ளனர். பின்னர், பாம்பு பற்றியத் தகவலை வனத்துறையினருக்குத் தெரிவித்துவிட்டு மணிகண்டனை மருத்துவக் குழுவினர் பரிசோதித்ததில் பாம்புக் கடியால் உடலில் விஷம் கலக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இறுதியில் அந்தப் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment