மும்பையில் 65 வயது பெண் ஒருவரை ஆடை அவிழ்த்து டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் கடந்த 25ம் திகதி, 65 வயது பெண் ஒருவர் தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியுள்ளார்.
அவரை பரிசோதித்த இரண்டு பெண் டிக்கெட் பரிசோதகர்கள் மிரா ரோடு ரயில் நிலையத்தில் உள்ள அறைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று, அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர்.
அந்த பெண் தன்னிடம் 25 ரூபாய் தான் இருப்பதாக கூறியபோது அதனை நம்ப மறுத்த அவர்கள் பணத்தை மறைத்து வைத்து உள்ளாரா என்பதை அறிய அந்த பெண்ணின் ஆடையை அவிழ்த்து சோதனையிட்டுள்ளனர்.
பின்னர், இவ்வாறு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அந்த பெண் ரயில்வே பொலிசில் அளித்த புகாரையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆடை அவிழ்ப்பு சோதனை நடந்தது தெரியவந்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட இரு பெண் டிக்கெட் பரிசோதகர்களையும் பணி இடைநீக்கம் செய்து மேற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment