சென்னையில் 28.07.2014 அன்று நடிகை ஐஸ்வர்யா ராய், லைஃப்செல் நிறுவனத்தின் பொது ஸ்டெம் செல் சேமிப்பு வங்கியைத் திறந்துவைத்தார்.
இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் ஸ்டெம் செல் அலகுகளை லைப்ஃசெல் எனும் நிறுவனம் பிரத்யேகமாகப் பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் 10ம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தொப்புள்கொடி பொது ஸ்டெம் செல் வங்கியை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி வைத்துள்ளார்.
இதையடுத்து, நடிகை ஐஸ்வர்யா ராய் பேசுகையில், நான் தாய்மை அடைந்தபோது ஸ்டெம் செல் தானம் தொடர்பாக லைஃப்செல் நிறுவனத்தினர் என்னை அணுகினர்.
பின்னர், எங்கள் உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்களைக் கலந்தாலோசித்த பின்னர், தொப்புள்கொடி ஸ்டெம் செல்லை தானமாகத் தர முடிவு செய்தேன்.
மேலும், இதன் மருத்துவ முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment