சுரங்கம் வழியாக இஸ்ரேலினுள் ஹமாஸ் இயக்கம் ஊடுருவுவதை அறிந்த இஸ்ரேல் படையினர் அந்த சுரங்கங்களை தகர்த்தபோது பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளை இஸ்ரேல் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் காஸாவிலிருந்த முன்னணி போராளிகள் குழுவொன்று இஸ்ரேலினுள் இரு சுரங்கங்கள் ஊடாக ஊடுருவ முயன்றிருந்தது.
இதனை முன்கூட்டியே அறிந்திருந்த இஸ்ரேல் படையினர் வான்வழித்தாக்குதல் நடத்தி போராளிகளை சுரங்கத்தினுள் வைத்து அழித்திருந்த வீடியோ காட்சியை இஸ்ரேல் படையினர் வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்களின் ஈகைத் திருநாளை முன்னிட்டு 24 மணிநேர யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்தது. இந்த நிலையில், கடந்த விடுமுறை தினங்களில் வழமையை விட குறைந்தளவு தாக்குதல்களே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல் படையினரால் காஸா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 1100 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment