ஒடிசாவில் இறந்த வாலிபரை மந்திரத்தின் மூலம் உயிருடன் எழுப்புவதாக கூரிய போலி பெண் மந்திரவாதியை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் மயூர் பிகாஞ் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் சூசன்ட் ஹன்சாவிற்கு (18) உடல்நிலை சரியில்லாததால் கடந்த 23ம் திகதி ரைராங்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வாலிபர் ஹன்சா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, கிராமத்தில் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தபோது அந்த வாலிபரின் கை அசைந்ததாக சிலர் கூறியதால் அவர் மீண்டும் உயிருடன் எழுவார் என்று குடும்பத்தினர் நம்பியுள்ளனர்.
இந்நிலையில் இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்த 3 பெண்கள், இறந்த வாலிபரை மந்திரம் சொல்லி உயிர்ப்பிக்க முடியும் எனக் கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர்.
பின்னர், நீண்ட நேரம் மந்திரம் சொல்லியும் எந்த பலனும் இல்லாதபோது, நிலைமை மோசமாவதை உணர்ந்த 3 பெண்களில் ஒருவரான பனாஹஸ்தா (60) என்ற பெண் தப்பி ஓட முயன்றுள்ளார்.
கிராம மக்கள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்ததோடு, சந்தேகத்தால் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
பின்னர் பொலிஸ் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில் அந்த பெண் போலி மந்திரவாதி என்று தெரிய வந்ததால் மூவரையும் கைது செய்ததோடு வாலிபரின் உடலுக்கு இறுதி சடங்கும் நடந்துள்ளது.

மண் சோறு திண்டா குழந்தை பிறக்கும் என்று நம்பும்போது...இதெல்லாம் நமபாமலா..இருப்பாங்க.......
ReplyDelete