நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக தமிழில் நடிப்பேன் என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகின் நம்பர் 1 நடிகையாகிவிட்டார் ஸ்ருதிஹாசன். இவர் தெலுங்கில் நடித்த ரேஸ்குரம், பல்பு போன்ற படங்கள் மாபெரும் வெற்றிப்பெற்றது.
அதேபோல் ஹிந்தியிலும் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் ஸ்ருதி தன்னை தமிழ் பொண்ணு என்று வாயில் மட்டுமே சொல்லி வருகிறாரே தவிர, கோலிவுட் பக்கமே வரவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அதற்கு பதில் அளித்த அவர் ‘ நான் வேண்டுமென்று எதையும் ஒதுக்கவில்லை, நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்,’ மேலும் பாலிவுட்டில் மட்டும் கிளாமரா? என்ற கேள்விக்கு ‘ தமிழில் அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment