மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் நூற்றுக்கணக்கானோரை காவுகொண்ட எபோலா வைரஸ் காய்ச்சல், நைஜீரியாவிலும் பரவி வருகிறது.
லைபீரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் எபோலா வைரஸ் தாக்கத்தால் நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சர்வதேச விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய இறங்குதுறைகளில், மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முழுமையான சோதனைக்குப் பின்னரே வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கென்யா, லைபீரியா உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 660 பேர் பலியாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment