உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலை போப்ஸ் சஞ்சிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகின்றது.
வீரர்களுக்கு போட்டி மூலம் கிடைக்கும் பணம் மற்றும் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது.
இந்த பட்டியலில் கடந்த பல வருடங்களாக இந்தியா சார்பில் சச்சின் ஆதிக்கம் செலுத்திவந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்ற நிலையில், சச்சினின் இடத்தை தோனி பெற்றுக்கொண்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்களில் உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த வருடம் 21 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளார்.
கால்பந்து பிரபலங்களான ரொனால்டோ, லியோனல் மெஸ்சியை விட கடந்த ஆண்டில் தோனி கூடுதலாக சம்பாதித்துள்ளார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் (சுவிட்ஸர்லாந்து), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோர் தலா 46 மில்லியன் டொலர்களை சம்பாதித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், ஃபில் மிக்கெல்சன் ஆகியோர் முறையே, 2 மற்றும் 3ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.
டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா நான்காவது இடத்திலும் உலகின் அதிவேக மனிதர், உசைன் போல்ட் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முதல் பத்து இடங்கள்:-
1. Roger Federer (Tennis) and Tiger Woods (Golf): 46 million dollars each
2. LeBron James (Basketball): 27 million dollars
3. Phil Mickelson (Golf): 25 million dollars
4. Maria Sharapova (Tennis): 23 million dollars
5. Mahendra Singh Dhoni (Cricket): 21 million dollars
6. Usain Bolt (Track and Field): 20 million dollars
7. Kobe Bryant (Basketball): 19 million dollars
8. Li Na (Tennis): 15 million dollars
9. Cristiano Ronaldo (Football): 13 million dollars
10. Lionel Messi (Football): 13 million dollars

0 comments:
Post a Comment