ஹிரோஷிமாவில் அணுகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட வன்கிர்க் 93ஆவது வயதில் காலமானார்!

இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை எரிந்த அமெரிக்க விமானத்தில் இருந்த விமான உதவியாளர் தியோடர் வன்கிர்க் தனது 93ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார்.

எனோலா கே என்ற அமெரிக்க போர் விமானத்தில் பயணித்த 12 பேரில் தியோடர் வன்கிர்க் மாத்திரமே இதுவரை காலமும் உயிருடன் இருந்துள்ளார். 

இவர் வீசிய வெடிகுண்டு ''லிட்டில் போய்'' என பெயரிடப்பட்டிருந்தது. இவருடன் இருந்த உதவியாளர் மோர்கில் ஜெப்சன் 2010ஆம் ஆண்டு காலமானார்.

1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும்- 9ஆம் திகதி நாகசாகி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. 

அதில் ஹிரோஷிமாவில் மாத்திரம் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாக்கியில் 80 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய அக்குழுவில் 24 வயது நிரம்பிய தியோடர் வன்கிர்க் என்ற விமானியும் இடம் பெற்றிருந்தார். நெதர்லாந்தை சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

ஜோர்ஜியாவில் குடும்பத்துடன் வசித்துவந்த இவர் தனது 93 வயதில் இன்று (30) காலமானார். இந்த தகவலை அவரது புதல்வர் தோம் வன்கிர்க் தெரிவித்துள்ளார். தியோடர் வன்கிர்கை இரண்டாம் உலகப்போரின் ஹீரோ என்பார்கள். எனினும் என்னை பொறுத்தவரை அவர் எனக்கு நல்ல தந்தையாக இருந்தார் என தோம் வன்கிர்க் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குண்டு வீசியதை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை எனவும் மாறாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர உதவி செய்ததாக கூறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலமான தியோடர் வன்கிர்கின் இறுதி சடங்கு அடுத்தவாரம் பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment